ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகபொது வெளியில் கருத்து தெரிவிப்பது கவர்னருக்கு அழகல்லகே.பி.முனுசாமி பேச்சு

Update: 2023-04-07 19:00 GMT

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பேசுகையில் பழைய உறுப்பினர்களுடன், புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமி படம் அடங்கிய புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக உயர்ந்த பதவியில் இருக்கும் கவர்னர் ரவி பொது வெளியில் இப்படி பேசுவது அவருக்கு அழகல்ல. முடிந்து போன நிகழ்வை பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது.

நாட்டின் வளர்ச்சியை தடுக்க வெளிநாடுகளில் இருந்து எப்படிப்பட்ட சதி வந்தாலும் அதை பிரதமர் மோடி முறியடிப்பார். இது போன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்களையும் கைது செய்வார். அதே போல தமிழக அரசு மற்றும் அதிகாரிகளும் இந்த விஷயத்தை சிறப்பாக கையாளுவார்கள் என்று பேசினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், செய்தி தொடர்பாளர் சமரசம், நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர் சாகுல்அமீது, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, சிறுபான்மை பிரிவு மகபூப், ஐ.டி.பிரிவு வேலன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்