பேரூராட்சி ஊழியர் வீட்டில் நகை,பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

ஆரல்வாய்மொழி அருகே பேரூராட்சி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-24 10:14 GMT

ஆரல்வாய்மொழி,

கன்னியாகுமரி மாவட்டம்,ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிமலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மனோகரன் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் விஜி மலர் மற்றும் குழந்தைகள், மற்றும் மனோகரனின் சகோதரி அருள்ஜோதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோர் வீட்டின் முதல் அறையில் தூங்கினர். அதேபோல் வீட்டில் வேறு அறையில் மனோகரனின் பெற்றோர் தூங்கினார்கள்.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் மனோகரனின் மகள் சுரேகா ஏதோ சத்தம் கேட்டு திடீரென எழும்பியுள்ளார்.அப்போது வீட்டிலிருந்து யாரோ வெளியே செல்வதை பார்த்துள்ளார். உடனே வீட்டில் உள்ளவர்களை எழுப்பி உள்ளார். அவர்கள் எழும்பி பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் மேல்பக்கம் உள்ள தாழ்பாள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனைவரும் பீரோ உள்ள அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு பீரோ உடைக்கப்பட்டு 2 நெக்லஸ், 2 செயின், 5 மோதிரங்கள், கம்மல்கள் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும்  ரூ. 2500  திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கல் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .தகவல் அறிந்து வந்த போலீசார் அருகிலிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்து,தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்