தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்

தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்

Update: 2023-05-31 18:45 GMT

தலைஞாயிறு பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டு அவரவர் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவை குறித்து பேசினர். தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் மோட்டாரை வைத்து குடிநீரை உறிஞ்சும் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ராஜேந்திரன், மாதவன், முத்துலட்சுமி, அருணா, அஜய் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்