வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார். பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கியதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வார்டு கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, சாலை வசதி குறித்து ேபசினர். இதில் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதவன், முத்துலட்சுமி, அருணா, அஜய் ராஜா, ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.