திருக்கோவிலூரில் வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு சீல் வைப்பு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருக்கோவிலூரில் வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாாிகள் சீல் வைத்தனா்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் பஸ்நிலையத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள், மாத வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரித்தும் இதுவரை வாடகை பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கீதா உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 6 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது வாடகை பாக்கியை விரைவில் செலுத்த வேண்டும் என கடை நடத்தி வந்தவர்களிடம் அறிவுறுத்தினர்.