ரூ.8½ லட்சத்தில் பல்நோக்கு கட்டிட பூமி பூஜை

பைசுஅள்ளி பஞ்சாயத்தில் ரூ.8½ லட்சத்தில் பல்நோக்கு கட்டிட பூமி பூஜை நடந்தது.;

Update: 2022-06-16 17:10 GMT

காரிமங்கலம்:-

காரிமங்கலம் யூனியன் பைசுஅள்ளி பஞ்சாயத்து கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தில் பல்நோக்கு சமுதாய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்திற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன், முன்னாள் தலைவர் வேலன், ஒன்றிய கவுன்சிலர் மாது, கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்