பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் - அண்ணாமலை

தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update: 2025-01-02 19:28 GMT

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்கள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக காவல் துறை குற்றங்களை பதிவு செய்ய அனுமதி மறுக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கண்டித்து அனுப்பிவிடுகிறது.

"பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றும் வரும் வன்முறைகளுக்கு மதுரையில் நாளை திட்டமிட்டப்பட்ட பா.ஜ.க. மகளிரணி பேரணியை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்போம் என தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. எத்தனை பள்ளிகளை சீரமைத்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன். இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறீர்கள். வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்றால், என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்? பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும்.

எனது சாட்டை அடி போராட்டம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எனக்கும் பெண் குழந்தை உள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் தோல்வி அடைந்துள்ளது. அது சரியாகும் வரை சாட்டை அடி போராட்டத்தை விடப்போவதில்லை. செருப்பு இல்லாமல் நடக்கும் போதுதான் தெரிகிறது தமிழகத்தில் சாலைகள் சுத்தமாக இல்லை. தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்