பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-17 18:54 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு 5 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து செவிலியர்களுக்கும் உயர்த்தப்பட்ட ஊதியமான ரூ.18 ஆயிரத்தை வழங்க வேண்டும். ஊதியத்தை மாத முதல் நாளில் வழங்க வேண்டும். என்.பி.பி.சி. திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணி நியமனத்தின் போது குறிப்பிடாத புதிய நடைமுறையை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடர்பான கோரிக்கை மனுவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் முதன்மை செயலாளருக்கு மாவட்ட கலெக்டர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் வழியாக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்