குறுகலான பாமினி பாலத்தில் வாகன ஓட்டிகள் அவதி

தெற்கு தென்பரை, பாலையூரை இணைக்கும் குறுகலான பாமினி பாலத்தில் செல்ல வாகனஓட்டிகள் அவதி. இடித்து அகற்றிவிட்டு அகலமான புதியபாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-19 18:45 GMT

திருமக்கோட்டை:

தெற்கு தென்பரை, பாலையூரை இணைக்கும் குறுகலான பாமினி பாலத்தில் செல்ல வாகனஓட்டிகள் அவதி. இடித்து அகற்றிவிட்டு அகலமான புதியபாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான பாலம்

திருமக்கோட்டை அருகே உள்ள தெற்கு தென்பரையில் இருந்து பாளையக்கோட்டையை இணைக்கும் குறுகலான பாலம் உள்ளது.

இந்த பாலம் வழியாக முத்துப்பேட்டை, மன்னார்குடி, தென்பரை, பாளையக்கோட்டை, வல்லூர், மாங்கோட்டை நத்தம், கோவிந்த நத்தம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர்.

5 கிலோ மீட்டர் சுற்றி...

இவ்வாறு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் குறுகலான பாலமாக உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக சிறிய வாகனங்களால் மட்டுமே சென்றுவர முடிகிறது. பெரிய வாகனங்களால் இந்த பாலம் வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் 5 கிலோமீட்டர் சுற்றி வடக்கு தென்பரை வழியாக செல்ல வேண்டி உள்ளது. எனவே அனைத்து தர மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் இந்த குறுகலான பாமினி பாலத்தை இடித்து அகற்றி விட்டு அனைத்து விதமான வாகனங்களும் சென்றுவரக்கூடி வகையில் அகலமான புதிய பாலம் வேண்டும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறுகலாக உள்ள பாமினி பாலத்தை இடித்து அகற்றி விட்டு, அகலமான புதிய பாலம் கட்டப்படுமா என பொதுமக்கள், வாகனஓட்டிகள், மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்