குறுகலான பாலத்தால் வாகனஓட்டிகள் அவதி

கூத்தாநல்லூர் அருகே குறுகலான பாலத்தால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அகலமான புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-23 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குறுகலான பாலத்தால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அகலமான புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய வழித்தடம்

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள மூலங்குடி என்ற இடம் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகரப்பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும், மேலும், திருவாரூருக்கு சென்று வர குறைவான தூரம் உள்ள சாலையாகவும் உள்ளது.

அதனால், இந்த சாலையில் பஸ்கள் மற்றும் லாரி, பள்ளி வாகனங்கள், கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும், இந்த சாலையை வடபாதிமங்கலம், புனவாசல், வடகட்டளை, ஓகைப்பேரையூர், வடபாதி, மூலங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அன்னமரசனார் ஆறு

இந்த நிலையில், மேற்கண்ட சாலையில் புனவாசல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே அன்னமரசனார் ஆறு செல்கிறது. இதனால், அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு குறுகலான பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் 100 ஆண்டுகளை கடந்ததால் அதன் பலம் குறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த பாலம் குறுகலாக இருப்பதால் ஒரு வாகனம் மட்டுமே பாலத்தில் செல்ல முடிகிறது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் கடந்து சென்று வர முடியாத நிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் இந்த ஒரு பாலம் மட்டுமே பல ஆண்டுகளாக உள்ளது.

குறுகலான பாலம்

இதனால், அவசரமாக செல்லக்கூடிய 108ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பலம் இழந்து காணப்படும் இந்த குறுகலான பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்