புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தேனியில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனியில், மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பள்ளம் தோண்டி ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி காரணமாக ஏற்கனவே இருந்த தார்சாலை தற்போது மண் சாலையாக மாறியுள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.