திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; விவசாயி பலி

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் விவசாயி பலியானார்.

Update: 2023-07-14 19:30 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ்சரகம் தும்மகுண்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவருடைய மகன் வைரன் (வயது 40). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தும்மகுண்டில் இருந்து திருமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் காங்கேயநத்தம் விலக்கு அருகே வந்த போது, எதிரே திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற மினி வேன் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வைரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சிந்துபட்டி போலீசார் இவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்