மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2022-07-08 21:44 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தைச் சேர்ந்தவர் அகிலம்மாள் மகன் அஜித் (வயது 19). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அகிலம்மாள் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபரை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்