வேலாயுதம்பாளையம் அருகே சிவராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 39). நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளை காவிரி ஆற்று பாலத்தின் அடியில் நிறுத்தினார். தொடர்ந்து ரஞ்சித்குமார் திதி கொடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.