மோட்டார் சைக்கிள் திருட்டு
திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிளை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர், செவலைரோடு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா மனைவி மஞ்சு(வயது 27). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னா் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.