அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்

கருங்கல் அருகே அரசு பஸ் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-08-17 17:54 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே அரசு பஸ் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி வந்த அரசு பஸ்சை பூட்டேற்றி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வினுகானந்தன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் கருங்கல் அருகே பாலூர் சந்திப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் வரும்போது கொல்லங்கோடு கிராத்தூர் புன்னமூட்டுகடை பகுதியைச் சேர்ந்த ஜினு மோசஸ் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜினுமோசஸ், பின்னால் அமர்ந்திருந்த வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கருங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் வினுகானந்தன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்