மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

ஜோலார்பேட்டை அருகே மேம்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-09-18 18:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் அடுத்த ஈ.பி.ஆபீஸ் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸ் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 27). பெயிண்டர். இவரது மனைவி ரேகா.

இந்த நிலையில் சந்தோஷ் தனது மாமியார் வீடான பாச்சல் ஜெய்பீம் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாச்சல் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்