மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம்

வால்பாறையில் மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-12 19:00 GMT

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழ் நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், வாகன ஓட்டிகளுக்கான நலவாரியத்தில் உறுப்பினர்களாக ஒட்டுநர்கள் சேருவதற்கான படிவங்கள் வழங்கப்படும். தொழிற்சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் பணிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது சங்கத்தின் அடையாள அட்டையை பயன்படுத்தி அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் தி.மு.க நகர செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் ராஜ், துணை செயலாளர்கள் ராஜா, ராமஜெயம், பாலு, சங்க வக்கீல் வினோத் குமார், வால்பாறை பகுதி ஓட்டுநர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீட்டர், சலீம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்