கஞ்சா விற்ற மாமியார்-மருமகள் கைது
கீழ்வேளூர் அருகே கஞ்சா விற்ற மாமியார்-மருமகள் கைது செய்யப்பட்டனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கஞ்சா விற்ற மாமியார்-மருமகள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கோவில்கடம்பனூரில் கஞ்சா விற்கப்படுவதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், தனிப்படை போலீசார் கீழ்வேளூர் அருகே கோவில்கடம்பனூர் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவது தெரிய வந்தது.
மாமியார்-மருமகள் கைது
அதன்பேரில், போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பதற்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், வீட்டிற்குள் வைத்து கஞ்சா விற்ற பிரகாஷ் மனைவி ரேணுகா (வயது 28), ராமசாமி மனைவி அம்பிகா (45) ஆகிய 2 பேரை பிடித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகா, அம்பிகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மாமியார்-மருமகள் ஆவர்.