தொழிலாளியிடம் பணம் பறித்த தாய்- மகள் கைது

நெல்லை தச்சநல்லூரில் தொழிலாளியிடம் பணம் பறித்த தாய்- மகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-07 19:42 GMT

நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் உசேன். தொழிலாளி. இவர் நேற்று தச்சநல்லூர் மதுரை ரோட்டில் உள்ள பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பெண்களில் ஒரு பெண் உசேன் பையில் இருந்த ரூ.400-ஐ நைசாக பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனை பார்த்த உசேன் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த 2 பெண்களையும் பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா விசாரணை நடத்திய போது, அவர்கள் திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த காளியப்பன் மனைவி சாந்தி என்ற பார்வதி (வயது 50) என்பதும், இவரின் மகள் ராசாத்தி (20) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது நெல்லை சந்திப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்