மதுரை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு- சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 70-ஐ கடந்தது

மதுரை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.

Update: 2023-09-28 20:10 GMT


மதுரை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்குவை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் இந்நோய் பரவி வருகிறது. கடந்த 1-ந்ேததி முதல் 26-ந்தேதி வரை 107 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 107 பேரில் 48 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 59 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 35-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளும், சிறுவர்களும்தான்.

ஒரே நாளில் 12 பேருக்கு..

இந்த நிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே வீடு, வீடாக சென்று டெங்கு நோயை பரப்பும் கொசு ஒழிப்பு குறித்து மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் டெங்கு பாதிப்பால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 71-ஆக உயர்ந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்