திருவாலங்காடு அருகே மூதாட்டி மர்மச்சாவு

திருவாலங்காடு அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2022-08-25 08:55 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த காபுலகண்டிகை பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மனைவி குமாரி (வயது 70). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

கணவர் வைத்தியநாதன் கைவிட்ட நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக தனது சகோதரியுடன் மணவூர் பகுதியிலுள்ள வீட்டில் குமாரி வசித்து வந்தார். நேற்று முன்தினம் குமாரி சென்னையில் உள்ள மகன், மகள் வீட்டுக்கு சென்று விட்டு இரவு மணவூர் திரும்பி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை மணவூர் - தொழுதாவூர் சாலை அருகே உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர் பின்புறம் மர்மமான முறையில் குமாரி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி குமாரி வயது மூப்பின் காரணமாக நடந்து செல்லும்போது மயக்கமடைந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷிடம் அந்த பகுதி மக்கள் கடந்த ஆண்டு இதே பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இவரும் மர்மமான முறையில் இறந்து இருப்பதால் இவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

கஞ்சா பயன்படுத்தும் வாலிபர்களால் இந்த பகுதியில் பெரும் அச்சுறுத்தல் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்