பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மருத்துவ கட்டமைப்புகள் தயாராக இருக்க சுகாதாரத்துறை உத்தரவு

அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-09-02 10:55 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் குறிப்பாக

* குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல்,

* கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,

*மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல்,

* மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதி இருப்பதை உறுதிசெய்தல்,

*காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பலாம்,

*புயல் மற்றும் கனமழைக்கு முன்பே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்,

*பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்