பருவமழை குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

லால்குடியில் பருவமழை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2022-07-02 19:51 GMT

லால்குடி, ஜூலை.3-

லால்குடி தீயணைப்பு மீட்புக்குழுவின் சார்பில் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கபிரியேல்புரம் நடுநிலைப்பள்ளிகளில் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு பிரசாரம் லால்குடி தாசில்தார் சிஸிலினாசுகந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மழைக்காலங்களில் வீட்டில் கியாஸ் சிலிண்டர்களை எப்படி பயன்படுத்த வேண்டும். ஆற்றோரங்களில் குழந்தைகளை செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கினால் எப்படி தப்பிப்பது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் லால்குடி தனி தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலக பணியாளர்கள் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்