அம்மா உணவகத்தில் கள்ளநோட்டா?கோபியில் போலீசார் விசாரணை

அம்மா உணவகத்தில் கள்ளநோட்டா? கோபியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்

Update: 2023-08-08 21:08 GMT

கோபியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு ஒன்று கள்ளநோட்டு என ெதரியவந்தது. இதையடுத்து அந்த 10 ரூபாய் நோட்டு அம்மா உணவகத்தில் நூலில் கட்டி தொங்கவிடப்பட்டதுடன், கள்ளநோட்டு என எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அம்மா உணவகத்துக்கு கோபி போலீசார் சென்று அந்த நோட்டை கைப்பற்றி, அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியில் உள்ள பணம் எண்ணும் எந்திரத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அது கள்ளநோட்டு இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்