தமிழ்நாடு என்ற வார்த்தையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்த பெண்

தமிழ்நாடு என்ற வார்த்தையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்து பெண் சாதனை படைத்துள்ளர்.

Update: 2023-01-27 17:23 GMT

வேலூர் மாவட்டம் கனிகனியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.கலைவாணி. இவர் தமிழ்நாடு என்ற வார்த்தையை 2023 முறை எழுதி அதில் தமிழக முதல்-அணைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இவர் இதற்கு முன்பு திருக்குறளில் பல்வேறு சாதனைகளும், 200-க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார். கதை, கவிதை, கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

பட்டிமன்ற பேச்சாளர், ரேடியோ ஆர்.ஜே. என சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இருக்கிறார். வேலூர் மாவட்டத்தின் முதல் திருக்குறள் தூதுவர் ஆவார். பண்பாடு அமைதித் தூதுவராகவும் 2021-ல் இருந்துள்ளார். இந்த சாதனைகளை ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட் சாதனையாக ஏற்று பதிவு செய்து கலைவாணியை பாராட்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்