விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்

செம்பட்டி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவ சிகிச்சை பெற அமைச்சர் இ.பெரியசாமி உதவி செய்தார்.

Update: 2023-06-11 19:30 GMT

ஆத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சென்றனர். அப்போது திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அருகே வீரக்கல் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அமைச்சர் இ.பெரியசாமி காரை நிறுத்தி உடனே கீழே இறங்கினார். பின்னர் அமைச்சரும், தி.மு.க. நிர்வாகிகளும் சேர்ந்து காயம் அடைந்த அந்த வாலிபரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்தவரை முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்பு அந்த வாலிபரை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சருடன் திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவருக்கு அமைச்சர் இ.பெரியசாமி, உதவி செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்