நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்;

Update:2024-02-18 12:28 IST

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாகம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்