காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

காசாவில் நடந்த மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-19 10:08 GMT

சென்னை,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

"காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒருபோதும் தீர்வாகாது. காசாவில் அமைதியை மீட்டெடுக்கவும், மனிதாபிமானமற்ற வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்வர வேண்டிய நேரம் இது."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்