வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி;சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Update: 2023-03-21 04:35 GMT
Live Updates - Page 2
2023-03-21 04:59 GMT

“கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

“2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது”

இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன"

"50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்;

இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்"

"தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்"

"ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்"

"சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன"

2023-03-21 04:49 GMT

தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

சென்னை,

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி னார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"தானியங்கள் மட்டுமல்ல காய்கறி, பழங்களையும் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான சவால்"

மண்வளம் மங்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

 தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது



Tags:    

மேலும் செய்திகள்