“கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
“2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது”
இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன"
"50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்;
இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்"
"தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்"
"ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்"
"சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன"