திம்பம் மலைப்பாதையை தாமதமாக கடந்ததாக மினி லாரி டிரைவருக்கு அபராதம்

திம்பம் மலைப்பாதையை தாமதமாக கடந்ததாக மினி லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-24 22:04 GMT

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.43 மணிக்கு கோவையில் இருந்து மைசூருக்கு அட்டை பாரம் ஏற்றிச் சென்ற மினி லாரி சரியான நேரத்தில் காரப்பள்ளம் சோதனைச்சாவடியை கடக்கவில்லை. தாமதமாக வந்துள்ளது என கூறி மினி லாரி டிரைவருக்கு வனத்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

அதற்கு மினிலாரி டிரைவர் வனத்துறையினரிடம், திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளை நாங்கள் முதல் கியரில் மட்டுமே இயக்க முடியும். இதனால் வாகனங்களை 5 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இயக்க முடியும். 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வனப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.

டயர் பஞ்சர் ஆனாலும் வேறு பழுது ஏற்பட்டாலும் நாங்கள் எப்படி 30 கிலோ மீட்டர் தூரத்தை 1½ மணி நேரத்தில் காரப்பள்ளம் சோதனை சாவடியை கடக்க முடியும். 10 நிமிடம் தாமதமாக வந்ததால் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு லோடு மூலம் கிடைப்பதே 800 ரூபாய்தான். இதில் தேவையில்லாத அபராதம் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் இதைப்பார்த்து, அதிருப்தி அடைந்தார்கள். அதன்பின்னர் மினிலாரி டிரைவர் அபராதத்தை செலுத்திவிட்டு சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்