விருதுநகரில் மினி மாரத்தான்
பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விருதுநகரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இருந்து மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை விருதுநகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 70 மாணவர்கள் பங்கு பெற்றனர்.