கார் மோதி மில் ஊழியர் பலி

கார் மோதி மில் ஊழியர் பலி

Update: 2023-06-25 19:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிரபு சங்கர்(வயது 37). இவர் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரபு சங்கர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்ப மில்லின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பாலக்காட்டை சேர்ந்த முகமது ரபி என்பவரது கார் திடீரென அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்