வேளாங்கண்ணியில் 40 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

வேளாங்கண்ணியில் 40 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-08-30 22:25 IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோப்புத்தூள் கலந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 40 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதேபோல் அதிக நிறம் சேர்க்கப்பட்ட 6 கிலோ மசாலா நிலக்கடலை கைப்பற்றி அழிக்கப்பட்டது. ஒரு மளிகை கடையில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான 40 சில்லி சாஸ் பாட்டில்கள் கண்டறியப்பட்டு அதனை கைப்பற்றி அழிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்