மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் போக்குவரத்து நாளை வரை ரத்து

தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன.;

Update:2023-12-21 09:10 IST

நீலகிரி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக இம்மாத தொடக்கம் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலை ரெயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் ஹில் குரோவ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. தற்போது இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் போக்குவரத்து நாளை வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்