13, 14 தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு: பொங்கலை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-01-12 09:26 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைய முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகினனர்.

ரெயில் மற்றும் பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், மக்கள் தங்களது பயண நேரத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும், நாளை முதல் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால், அவர்களின் பயண வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதாவது 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்றும், கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்