இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மேஸ்திரி கைது

பென்னாகரம் அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-12 18:45 GMT

பென்னாகரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணமூர்த்தி. கட்டிட மேஸ்திரியான இவர் இளம்பெண்ணுக்கு உறவினர் ஆவார். இதன் காரணமாக இளம்பெண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இளம்பெண்ணின் கணவர் அவரை கண்டித்துள்ளார். அதன் பின்னர் கிருஷ்ணமூர்த்தியிடம் போனில் பேசுவதை அந்த இளம்பெண் நிறுத்தி கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறாக நடக்க முயன்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் சத்தம் போடவே பெண்ணின் மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரையும் கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த இளம்பெண் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணிடம் தவறாக முயன்ற கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்