கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள்ஆதார், ரேஷன் அட்டையை சமர்ப்பிக்க கெடு

கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்கள் ஆதார், ரேஷன் அட்டையை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-09 18:45 GMT

நெல்லை மண்டல வீட்டுவசதி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மண்டல வீட்டுவசதி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் ரேஷன்கார்டு விவரங்களை தொடர்புடைய சங்கத்தின் அலுவலர்களை அணுகி வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்