மதுரை: திடீரென தீப்பிடித்த டிரான்ஸ்பார்ம்; பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மேலூர் அருகே திடீரென பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது உறங்கான் பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு புலி மலைப்பட்டி செல்லும் சாலை செல்லும் வழக்கில் 250 கிலோ வாட் செயல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்ம் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென்று லேசான தீப்பொறி பறந்துள்ளது. அதனை அடுத்து சில நிமிடங்களில் கரும்புகை ஏற்பட்டு தீ மளமளவென எரிந்தது. இதனால் அப்பகுதியை மக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேலையாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
புதிய டிரான்ஸ்பார்ம் அமைத்து தடையில்லா மின்சாரம் கிடைக்க மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.