மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் வக்கீல் அகத்தியன் பிறந்தநாள் விழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-02-23 10:16 GMT

பிறந்தநாள் விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் பேரனும், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன்- ஆஷா அன்பழகன் ஆகியோரின் மகனுமான வக்கீல் அகத்தியன் பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் இடத்தில் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் வக்கீல் அகத்தியன் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் தாத்தா, பாட்டியான பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.

மேலும் அவர் சித்தர் பீட வளாகத்தில் செவ்வாடை பக்தர்களுடன் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.

பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லம், பொலம்பாக்கம் தொழு நோயாளி மையம், பெருங்கருணை கிராமத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் இல்லம், மதுராந்தகம் 7 ஸ்டார் அனாதை குழந்தை இல்லம் போன்ற இடங்களில் அன்னதானம், ஆடைகள், மின்விசிறி, முதலுதவி பெட்டிகள், அரிசி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ஞான பீடத்தில் அகத்தியன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தலைவர் கோ.ப அன்பழகன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரசன்னா வெங்கடேஷ், வக்கீல் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வந்தவாசி முன்னாள் எம்.பி. துரை, சினிமா சண்டை பயிற்சியாளர் பெசன்ட் நகர் ரவி, சினிமா நடிகர்கள் பூவையார், பழனி பட்டாளம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் தலைவர் கோ.ப.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மேலும் ரூ.20 லட்சம் மதிப்பிலான 3 இருசக்கர வாகனம், 23 சைக்கிள், 21 தையல் எந்திரங்கள், 3 எல்.இ.டி. டிவி, 2 கறவை மாடுகள், 2 தள்ளுவண்டி, ஒரு ஸ்பிரேயர் எந்திரம் டீ ஸ்டால், 500 சேலைகள், 200 பெட்ஷீட், 200 கடிகாரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வக்கீல் அகத்தியன் ஏழை-எளியவர்களுக்கு வழங்கினார். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்தளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் லிங்கநாதன், சிவக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்