தர்மபுரியில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

Update: 2023-07-02 19:00 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தர்மபுரி வட்ட பேரவை கூடடம் தர்மபுரி ஊர்தி ஓட்டுனர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். முருகமாணிக்கம் வரவேற்று பேசினார். வட்ட செயலாளர் முனிராஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், வட்ட துணைத்தலைவர் மாணிக்கம், வட்ட இணை செயலாளர்கள் மாயக்கண்ணன், சுப்பிரமணியம் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசை போல் 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணி ஓய்வு கருத்துரு அனுப்பாமலும், நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஓர் ஆண்டு காலமாகியும் பணபலன்கள் கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் ஓய்வு பெற்றவர்களுக்கு பணபலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து துறையை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்