சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எப்.ஓ. இணைந்து சிறந்த சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பற்றிய சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் 72-வது ஆண்டை முன்னிட்டு இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எப்.ஓ. இணைந்து சிறந்த சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பற்றிய சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டம் மதுரை கே.கே.நகரில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும். அதன்படி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ள தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மதுரை துணை மண்டல இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.