சென்னை- கன்னியாகுமரி தொழில் வடதிட்டத்தின் கீழ் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சங்ககிரி சாலையில் நகராட்சி அலுவலகம் வரை மற்றும் திருச்செங்கோடு சாலையில் பஸ் நிலையத்தில் இருந்து டி.வி.எஸ்.மேடு ராஜா மெஸ் வரையும் மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் அப்பகுதியில் செல்லும் பஸ்கள் மாற்று வழியில் செல்வதற்கான ஆலோசனை கூட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது.
சேலம் கோட்ட பொறியாளர் சுகுமார் தலைமை தாங்கினார். இதில் உதவி பொறியாளர்கள், சேலம் அரசு பஸ் போக்குவரத்து பொது மேலாளர், ஈரோடு பஸ் போக்குவரத்து பொது மேலாளர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர், பள்ளிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க திருச்செங்கோடு, ஈரோடு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 4 வழிகளை நேரில் ஆய்வு செய்து தேர்வு செய்து வைத்துள்ளனர். இதனை இதனை நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது என கூறப்பட்டது. கலெக்டரின் முடிவு படி போக்குவரத்து விரைவில் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தனர்.