புயலால் பாதித்த மக்களுக்கு மருந்து-உணவு: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு

புயல் நிவாரணம் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-12-10 13:02 GMT

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் பகுதியில் "மாண்டஸ்" புயல் கரையை கடப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி.பிரதீப், சிறப்பு பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை புயல் வலுவிழந்து கரை கடந்ததால் அதிகளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் மின் கம்பம் சாய்ந்தது, கொக்கிலமேடு, பேரூர் பகுதியில் மரம் சாய்ந்தது, வெண்புருஷம் பகுதிகளில் கடல் அரிப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது.

இதில் பாதிப்படைந்த அப்பகுதி மக்களை தற்காலிகமாக முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் மூன்று வேளை உணவுகளை மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், கவுன்சிலர்கள் சுகுமார், மோகன்குமார், தேவிராமன் உள்ளிட்டோர் வழங்கி வருகிறார்கள்.

மேலும் புயல் நிவாரணம் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்