மருத்துவ கழிவுகள் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன.

Update: 2023-09-09 18:45 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன.

மருத்துவ கழிவுகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையோரத்தில் ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சிகள் மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட கழிவுகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தன.

தொற்றுநோய் பரவும் அபாயம்

இதன் அருகில் உள்ள தூத்துக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குவிந்து கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீா்ேகடு ஏற்பட்டு ெதாற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக விவசாய பணிகளுக்காக வயல்களுக்கு நடந்து செல்லும் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கும் நிலை இருந்தது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மருத்துவ கழிவுகளால் அவதியடைந்து வந்தனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் உரிய விசாரணை நடத்தி சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளை அகற்றி ெதாற்று நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரமானது.

அகற்றப்பட்டது

இதன் எதிரொலியாக பேரூராட்சி தலைவரின் நடவடிக்கையால் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உடனடியாக நேற்று சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்