மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 4, 5 ஊராட்சிகளில் வேலை செய்வதை தவிர்த்து ஒரு ஊராட்சியில் மட்டுமே வேலை செய்ய பரிந்துரை செய்ய வேண்டும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், மருத்துவ காப்பீடு, தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மலர்விழி மற்றும் சேகர், ரகோத்தமன், முருகன், கணபதி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் நிர்வாகிகள் பரிதா, ஆஷா, சங்கீதா, மணிமேகலை, சோபனா, சாரணி, பூவரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்