மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update:2023-10-27 02:30 IST

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நேற்று நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரராஜா, வட்டார கல்வி அலுவலர் கிளோரி டெல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், பொள்ளாச்சி தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் காயத்ரி, பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல், விண்ணப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. அதில் தேசிய அடையாள அட்டை 58 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதித்து உரிய மருத்துவ சான்றிதழ்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சிறப்பு பயிற்றுனர்கள் மஹிமா, லதா, கார்மல், செல்வி மோகனா மற்றும் முகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்