மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.;

Update:2023-10-07 00:45 IST

கொள்ளிடம்;

கொள்ளிடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பானுசேகர், வட்டார கல்வி அலுவலர் கோமதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, கவுன்சிலர் அங்குதன், ஊராட்சி தலைவர் கனகராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.முகாமில் கண் பார்வை குறைபாடு, உடல் இயக்க குறைபாடு, மன வளர்ச்சி குறைபாடு, காது கேளாமை போன்ற பல்வேறு வகையான குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் பயண அட்டை, உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்