தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மின் பகிர்மான வட்டம் காட்பாடி கோட்டத்தில் வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி காட்பாடி கோட்டத்தில் உள்ள மின்கம்பங்களில் சீரமைப்புபணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் உள்ள பழைய பீங்கான் உள்ளிட்ட பொருட்களை மாற்றி புதிய பொருட்களை பொருத்தும் பணி மற்றும் மின்பாதைகளுக்கு இடையுறாக உள்ள மரக்கிளை அகற்றும் பணி நடந்தது.
காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் லோ.பரிமளா தலைமையில் நடந்த இந்த பணிகளை வேலூர் மண்டல தலைமை பொறியாளர் க.தேன்மொழி, மேற்பார்வை பொறியாளர் சு.வெ.மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த பணியில் காட்பாடி கோட்டத்தை சேர்ந்த உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.